/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு
இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு
இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு
இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு
ADDED : செப் 15, 2025 02:27 AM
நடுவீரப்பட்டு: பெரியநரிமேடு கோவில் சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வ ழக்கு பதிந்தனர்.
பாலுார் அடுத்த பெரியநரிமேடு கிராமத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், மாரியம்மன் உள்ளிட்ட 3 கோவில்களின் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளது.
இது தொடர்பாக கடந்த 12ம் தேதி பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் கோவிலுக்குள் செல்ல 3 மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பை சேர்ந்தவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பிலும் காயமடைந்த அபிநயா,22; சிவசங்கரி,60; வடிவேல்,47; வசந்தவேல்,23; பிரபாகரன்,35; ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வசந்தவேல், பிரபாகரன், பழனிசாமி ராஜேந்திரன் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.