Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்து ஏற்படுத்தி தப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

விபத்து ஏற்படுத்தி தப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

விபத்து ஏற்படுத்தி தப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

விபத்து ஏற்படுத்தி தப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

ADDED : செப் 04, 2025 03:20 AM


Google News
Latest Tamil News
கடலுார்:பண்ருட்டி அருகே கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு, உதவி செய்யாமல் தப்பிச்சென்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெய்வேலி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர் முதல் நிலை காவலர்ராஜா. இவர் கடந்த மாதம் 28 ம் தேதி இரவு 7:30 மணியளவில் காரில் பண்ருட்டி சாலையில் சென்றபோது, கோவிந்தராசு என்பவர், அவரது மனைவி தங்கமணியுடன் சென்ற மொபட் மீது மோதி விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், பொதுமக்கள் தடுத்தும் நிற்காமல் காரில் தப்பித்து சென்றார்.

விபத்தில் படுகாயமடைந்த தங்கமணி, புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கணவர் கோவிந்தராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட நெய்வேலி நகர் முதல் நிலை காவலர் ராஜாவை, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us