ADDED : செப் 04, 2025 03:10 AM
திட்டக்குடி : குடும்ப பிரச்னை காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்ட து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 80. இவருக்கும் தனது மகனுக்கு குடும்ப பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த ராமசாமி, நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கார் நிறுத்தும் ெஷட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.