/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., அங்கீகார விவகாரம் உரிமை கோரி பா.தொ.ச., மனு என்.எல்.சி., அங்கீகார விவகாரம் உரிமை கோரி பா.தொ.ச., மனு
என்.எல்.சி., அங்கீகார விவகாரம் உரிமை கோரி பா.தொ.ச., மனு
என்.எல்.சி., அங்கீகார விவகாரம் உரிமை கோரி பா.தொ.ச., மனு
என்.எல்.சி., அங்கீகார விவகாரம் உரிமை கோரி பா.தொ.ச., மனு
ADDED : மே 18, 2025 02:49 AM

நெய்வேலி: பாட்டாளி தொழிற்சங்கம் தங்களையும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக அறிவிக்கக் கோரி என்.எல்.சி., சேர்மனிடம் மனு அளித்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி.,யின் அங்கீகாரம் பெறுவதற்கான ரகசிய ஓட்டெடுப்பு கடந்த ஏப். 25ம் தேதி நடந்தது. இதில், தொ.மு.ச., 2,507 ஓட்டுகள், (39.39 சதவீதம்), அ.தொ.ஊ.ச., 1389 ஓட்டுகள், (21.82 சதவீதம்) பா.தொ.ச., 1385 ஓட்டுகள் ( 21.76 சதவீதம்) பெற்றன.
இதில் 51 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்ற முதல் 2 சங்கங்களும் அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக என்.எல்.சி.,யால் அங்கீகரிக்கப்படுவார்கள் என்ற சூழல் நிலவியது.
இந்நிலையில் நேற்று என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமையிலான தொழிற்சங்க பேரவை செயலாளர் முத்துக்குமார், தலைவர் குமாரசாமி, பொது செயலாளர் செல்வராஜூ, பொருளாளர் ஆறுமுகம், அலுவலக செயலாளர் முருகவேல் ஆகியோர் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியிடம், 'சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ரகசிய ஓட்டெடுப்பில் 21.76 சதவீதம் ஓட்டுகளை பெற்ற பாட்டாளி தொழிற்சங்கத்திற்கும் என்.எல்.சி.,யின் அங்கீகாரம் வழங்க வேண்டுமென மனு அளித்தனர்.