/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு ஜூன் 5ம் தேதி தேர்தல் என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு ஜூன் 5ம் தேதி தேர்தல்
என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு ஜூன் 5ம் தேதி தேர்தல்
என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு ஜூன் 5ம் தேதி தேர்தல்
என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு ஜூன் 5ம் தேதி தேர்தல்
ADDED : மே 18, 2025 02:48 AM
நெய்வேலி: என்.எல்.சி.,யின் அங்கீகாரம் பெற்ற சங்கமான தொ.மு.ச.,வுக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி.,யில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச., உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சிலரது செயல்பாடுகள் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ரகசிய ஓட்டெடுப்பில் தொ.மு.ச., சிங்கிள் மெஜாரிட்டி பெறும் வாய்ப்பை இழந்தாக கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில், முதல்வர் ஸ்டாலின் தொ.மு.ச.,வுக்கு உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட்டார். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், தொ.மு.ச.,பேரவை பொது செயலாளர் சண்முகம் எம்.பி., ஜூன் 5ம் தேதி தொ.மு.ச.,வுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: என்.எல்.சி., தொ.மு.க., நிர்வாகிகள் தேர்தல் பேரவை செயலாளர் தனசேகரனை ஆணையாளராக கொண்டு நடைபெறும். வரும் 23ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனுத்தாக்கல் நடக்கிறது.
27 ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 5 ம் தேதி காலை 5:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப் பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள என்.எல்.சி., பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு இரவு 9:00 மணி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதனை உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.