ADDED : மார் 22, 2025 08:50 PM

கடலுார், : கடலுாரில், கிழக்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, தொழில் நுட்ப செயலாளர் விஜய் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில், வரும் மே மாதம் 11ல் மகாபலிபுரத்தில் நடக்க உள்ள சித்திரை பவுர்ணமி இளைஞர் பெருவிழாவில், கடலுார் கிழக்கு மாவட்டத்திலிருந்து 25ஆயிரம் பேர் பங்கேற்பது, சமூக நீதிக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசை கண்டிப்பதுடன், தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் ஆனந்த், சோழன், ஆனந்தராஜ், பிரேம், சுதாகர், விஜய், நடராஜ், புஷ்பராஜ், பாலு, கோபால், தயாளன், பிரபாகரன், ராஜவேலு, முருகன், பாண்டு உட்பட பலர் பங்கேற்றனர்.