/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு
வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு
வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு
வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடலை கொண்டு வர மனு
ADDED : செப் 15, 2025 02:25 AM

கிள்ளை: சவுதி அரேபியாவில், கார் விபத்தில் இறந்த வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம், குடும்பத்தினர் மனு அளித்தனர்.
சிதம்பரம் அடுத்த தா.சோ.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 34; இவருக்கு, தமிழச்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் தங்கி ரமேஷ் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
காரில், தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 12ம் தேதி காரில், ரமேஷ் உட்பட 5 பேர் வேலைக்கு சென்றனர். அப்போது, கார் விபத்துக்குள்ளானதில் ரமேஷ் உட்பட 3 பேர் இறந்தனர். தகவலறிந்த, ரமேஷ் குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.