மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு
மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு
மாவட்ட நுாலகத்தில் இடவசதி கோரி மனு
ADDED : ஜன 30, 2024 05:55 AM

கடலுார், : கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு வசதியாக, இட வசதி செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் சொரக்கல்பட்டு மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:
கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு அதிக அளவில் படித்து வருகிறோம். நுாலகத்தில் படிக்க போதிய இடவசதி இல்லாமல், படிக்க இடயூறு உள்ளது. எனவே, அங்கு, பூட்டியுள்ள அறைகளை திறந்து, இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், நுாலகத்தில் கழிவறை வசதியில்லை. அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


