/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2025 07:11 AM

கடலுார் : போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மனோகரன், மதியழகன், அசோகன், நடராஜன், பழனி, சிவராமன், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், சேகர், பாவாடை கண்டன உரையாற்றினர்.
ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், மருதவாணன், சுகுமாறன், விஜய் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.