ADDED : செப் 03, 2025 07:12 AM

கடலுார் : கடலுார், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லுாரியில் சமூக பணித்துறை மற்றும் பாதிரிகுப்பம் மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், மாதர் நல தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராஜேந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகுந்தன், கல்லுாரி பேராசிரியர் நிர்மல்குமார், பன்னீர்செல்வம், வினோத், உமாதேவி, ஆண்டாள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.