/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் வேலுாருக்கு அனுப்பி வைப்புபன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் வேலுாருக்கு அனுப்பி வைப்பு
பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் வேலுாருக்கு அனுப்பி வைப்பு
பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் வேலுாருக்கு அனுப்பி வைப்பு
பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் வேலுாருக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஜன 08, 2024 06:02 AM

கடலுார்: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொது மக்களுக்கு, அரசு வழங்கும் பன்னீர் கரும்பு அறுவடை கடலுார் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. அதையொட்டி அரசு பொங்கல் தொகுப்பை வரும் 10ம் தேதி முதல் வழங்க உள்ளது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை இந்த இடம் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்குவதால் ஆங்காங்கே விளைந்துள்ள பன்னீர்கரும்பை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குகிறது.
பன்னீர் கரும்பு 6 அடி நீளமுள்ள கரும்பு மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. கடலுார் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிகளவில் பயிர் செய்யப்படுவதால் இங்கிருந்து வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அரசு கொள்முதல் செய்வதற்கு உயரம் குறைந்த தகுதியற்ற கரும்புகள் வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.