/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு சேர்மன் தலைமையில் பேச்சுவார்தை பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு சேர்மன் தலைமையில் பேச்சுவார்தை
பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு சேர்மன் தலைமையில் பேச்சுவார்தை
பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு சேர்மன் தலைமையில் பேச்சுவார்தை
பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு சேர்மன் தலைமையில் பேச்சுவார்தை
ADDED : செப் 17, 2025 11:39 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்தது.
நெல்லிக்குப்பம் நகரத்தில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கபடுகிறது.இதற்காக 10 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.இந்த குடிநீர் நாளுக்கு நாள் தரம் குறைந்து வருகிறது.இதை சரி செய்ய குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 42 கோடி மதிப்பில் விஸ்வநாதபுரத்தில் 4 இடங்களில் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தனர்.
ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடிநீர் பாதிப்பதோடு விவசாயம் கேள்வி குறியாகும் என்பதால் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கவுன்சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கான திட்டத்திற்கு எதிர்காதீர்கள் என கேட்டுக்கொண்டனர். ஒரே இடத்தில் கிணறு அமைக்காமல் வெவ்வொறு இடங்களில் போட யோசனை கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதி பேர் வெளியேறினர்.வெவ்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.அதுவும் ஒரே சமயத்தில் போடப்படும் என சேர்மன் ஜெயந்தி உறுதியளித்தார்.இதையேற்று கவுன்சிலர் பன்னீர்செல்வம் தலமையிலானவர்களும்,அதிகாரிகளும் கையெழுத்து போட்டனர்.