/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது 'டிசி' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது 'டிசி' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு
ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது 'டிசி' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு
ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது 'டிசி' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு
ஆசிரியர்களை தாக்கிய 5 மாணவர் கைது 'டிசி' வழங்க கல்வி அலுவலர் உத்தரவு
ADDED : செப் 17, 2025 01:16 AM
வேப்பூர்:வேப்பூர் அரசு பள்ளியில், இரு பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 'டிசி' வழங்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி ஆசிரியர். நேற்று முன்தினம், பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்தது.
அப்போது, பிளஸ் 2 மாணவர்கள் சிலர், தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களை தொந்தரவு செய்தனர். மேலும், அவர்களை கண்டித்த பயிற்சி ஆசிரியர் மணிகண்டனை, தாக்கியதுடன், விடைத்தாள்களை கிழித்தெறிந்தனர். தடுத்த பயிற்சி ஆசிரியை ஸ்ரீநிதியையும் தாக்கினர். காயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஐந்து மாணவர்களை கைது செய்தனர்.
'டிசி' வழங்க உத்தரவு பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் ஆசிரியர்கள், காலை 10:30 மணியளவில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன் பள்ளியில் விசாரணை நடத்தினார். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கடந்தாண்டு முதல் பள்ளியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் டிசி வழங்க உத்தரவிட்டார்.