/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
ADDED : பிப் 25, 2024 04:29 AM

கடலுார், : கடலுாரில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார். பின், அண்ணாதுரை சிலை, எம்.ஜி.ஆர்., சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில், மீனவரணி தங்கமணி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஜெ., பேரவை ஆறுமுகம், மருத்துவரணி சீனுவாசராஜா, ஒன்றிய சேர்மன் பக்கிரி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கந்தன், பாலகிருஷ்ணன், இலக்கிய அணி ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் ஆதி நாராயணன் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.