/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தல் முடிவு வெளியீடு என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தல் முடிவு வெளியீடு
என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தல் முடிவு வெளியீடு
என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தல் முடிவு வெளியீடு
என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தல் முடிவு வெளியீடு
ADDED : ஜூன் 07, 2025 02:57 AM
நெய்வேலி : என்.எல்.சி., - தொ.மு.ச., தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.,யில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக திகழும் தொ.மு.ச., தொழிற்சங்கத்தில் 3,666 நிரந்தர தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், அலுவலக செயலாளர் உள்ளிட்ட 159 புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
3,597 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். ஓட்டு சதவீதம் 98.11 ஆகும். பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள என்.எல்.சி., பள்ளிக்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். இரவு 10:30 மணிக்கு தேர்தல் ஆணையாளர் தனசேகரன் மேற்பார்வையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
புதிய தலைவராக ஞானஒளி, பொதுச் செயலாளராக குருநாதன், பொருளாளராக அப்துல் மஜித், அலுவலக செயலாளராக சீனிவாசன் என, மொத்தம் 159 பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவரின் பெயர்களும் நேற்று காலை அறிவிக்கப்பட்டன.