Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பம் ஆலை பெண் தொழிலாளி சாவு: உறவினர்கள் மறியல்

நெல்லிக்குப்பம் ஆலை பெண் தொழிலாளி சாவு: உறவினர்கள் மறியல்

நெல்லிக்குப்பம் ஆலை பெண் தொழிலாளி சாவு: உறவினர்கள் மறியல்

நெல்லிக்குப்பம் ஆலை பெண் தொழிலாளி சாவு: உறவினர்கள் மறியல்

ADDED : ஜன 01, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் வேலை செய்தபோது, லாரி மோதி பெண் தொழிலாளி இறந்ததற்கு நிவாரணம் கேட்டு, உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பாப்பாத்தி, 45; இவர் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று ஆலையின் உள்ளே கரும்பு இறக்கும் இடத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கரும்பு இறக்குவதற்காக வந்த லாரி மோதியதில், பாப்பாத்தி உயிரிழந்தார்.

தகவலறிந்த வி.சி., உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் பாப்பாத்தியின் உறவினர்கள், ஆலை முன்பு திரண்டு, இறந்த பெண்ணுக்கு நிவாரணம் கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் அருண்பிரசாத், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், குருமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம், அவரது மகனுக்கு ஆலையில் வேலை தருவதாக உறுதியளித்தனர். அதையேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டத்தை 2:00 மணிக்கு முடித்துக்கொண்டனர்.

இதனால், அருங்குணம் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதே சமயம் ஆலையில் கரும்பு அறவையையும் நிறுத்தியதால் கரும்பு வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியதால் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us