/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED : செப் 23, 2025 07:39 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லி யம்மன் கோவிலில் நவராத் திரி உற்சவம் துவங்கியது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஷ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, சா முண்டி என சப்தகன்னிகைகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.
இக்கோவிலில் நவராத்திரி முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை வைத்து கொலு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவராத்திரி உற்சவம் நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 1ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. பூஜைகளை ராமு பூசாரி செய்து வருகிறார்.
இதே போன்று, நெல்லிக் குப்பம் வேணுகோபால சுவாமி, வரசித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.