/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED : செப் 23, 2025 07:39 AM
கடலுார் : கடலுார் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார், மஞ்சக்குப்பம், ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள கமல வல்லி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, இன்று (23ம் தேதி) துவங்கி, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு புற்றுமண் எடுத்தல், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கருட துவஜப்பிரதிஷ்டை நடக்கிறது.
நாளை காலை 9:00 மணிக்கு கொடியேற்றம், 10:30 மணிக்கு யாக சாலை ஹோமம், திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
சுவாமி புண்ணியகோடி விமானம், புரட்டாசி கருட சேவை, நாகவாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் தினசரி வீதியுலா நடக்கிறது.
30ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், 2ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனை, புஷ்பயாக உற்சவம், கொடி இறக்குதல் நடக்கிறது.
4ம் தேதி மாலை 6:00 மணிக்கு, 1008 சஹஸ்ரநாம அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.