/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஜமாபந்தி நிறைவு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு ஜமாபந்தி நிறைவு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ஜமாபந்தி நிறைவு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ஜமாபந்தி நிறைவு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ஜமாபந்தி நிறைவு விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 30, 2025 05:58 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி துவங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஜமாபந்தி அலுவலர் குமாரராஜா தலைமை தாங்கினார். தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., 23 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முகமது அசின் நன்றி கூறினார்