Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

ADDED : மே 13, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், '10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் செய்யாத சாதனையை, தி.மு.க., பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் செய்துள்ளது. சிதம்பரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவில், 288 கோடி ரூபாய் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 68 கி.மீ., மீட்டர் நீளத்திற்கு சிதம்பரம் நகர வீதிகளில் 33 வார்டுகளிலும் குடிநீர் பைப் புதைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, மாதம் 1000 வழங்கப்படுகிறது' என்றார். பொதுக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ரமேஷ், மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பாரிபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us