ADDED : மே 13, 2025 06:50 AM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு குயவர் வீதி வேழ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர்.
பின், அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.