/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அமைச்சர் பன்னீர்செல்வம் மகனுக்கு எம்.பி., சீட் பெற தீவிரமாக உள்ளார் புவனகிரியில் அண்ணாமலை பேச்சுஅமைச்சர் பன்னீர்செல்வம் மகனுக்கு எம்.பி., சீட் பெற தீவிரமாக உள்ளார் புவனகிரியில் அண்ணாமலை பேச்சு
அமைச்சர் பன்னீர்செல்வம் மகனுக்கு எம்.பி., சீட் பெற தீவிரமாக உள்ளார் புவனகிரியில் அண்ணாமலை பேச்சு
அமைச்சர் பன்னீர்செல்வம் மகனுக்கு எம்.பி., சீட் பெற தீவிரமாக உள்ளார் புவனகிரியில் அண்ணாமலை பேச்சு
அமைச்சர் பன்னீர்செல்வம் மகனுக்கு எம்.பி., சீட் பெற தீவிரமாக உள்ளார் புவனகிரியில் அண்ணாமலை பேச்சு
ADDED : ஜன 28, 2024 04:33 AM

புவனகிரி : 'புவனகிரி வெள்ளாற்றில் உப்பு நீர் புகுந்து நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படுகிறது' என அண்ணாமலை பேசினார்.
புவனகிரியில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டபோது அவர், பேசியதாவது:
தி.மு.க.,வின் கொத்தடிமையாக சில பத்திரிகையாளர்கள் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி சீரழிகிறது. ஸ்டாலினுக்கு முதல்வராக இருக்க எந்த தகுதியும் இல்லை. தற்போது தமிழகம் லஞ்சம், ஜாதி அரசியல், வாரிசு மற்றும் அடாவடி என என்ற நான்கு காலில் நிற்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம் தன் மகனுக்கு எம்.பி., சீட் பெறுவதில் தீவிரமாக உள்ளார்.
புவனகிரி வெள்ளாற்றில் உப்பு நீர் புகுந்து நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு தடுப்பணை அமைக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையில் நிச்சயம் அந்த மாற்றம் இருக்கும். கேரளாவில் மூன்று மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது.
தி.மு.க.,காரர்களின் பிள்ளைகள், அவர்களின் கல்வி நிலையங்களில் பலமொழி நடை முறைப்படுத்துகின்றனர். ஆட்சியாளருக்கு ஒரு வாழ்க்கை, சாமானியர்களுக்கு ஒரு வாழ்க்கையாக ஆட்சி நடத்துகின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
மாவட்ட செயலாளர் திருமாவளவன், சிதம்பரம் லோக்பை தொகுதி பொறுப்பாளர் தடா பெரியசாமி, மாவட்ட தலைவர் மருதை, பட்டியலணி துணைத் தலைவர் வெற்றிவேல், மாவட்ட பார்வையாளர் ஆதவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு, ஒன்றிய தலைவர்கள் ராஜா, சுந்தரமூர்த்தி, சின்னதுரை, ஆதிவராகன், மகளிரணி லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.