Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

ரூ.4.98 கோடியில் சில்வர் பீச் மேம்பாட்டு பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

ADDED : ஜன 28, 2024 04:59 AM


Google News
கடலுார் : கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை மேம்படுத்துதல், அன்னவல்லியில் சமுதாய நலக்கூடம், நாடக மேடை உள்ளிட்ட 4.98 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

கடலுார் சில்வர் பீச்சில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

வெள்ளிக் கடற்கரை பகுதியை மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் 4.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் நவீன பொழுதுபோக்கு மின் சாதனங்கள் அமைத்தல்.

அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதி கள். நடைபாதை, சிற்றுண்டி விற்பனை கடைகள் வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்த புதிய 108 ஆம்புலன்ஸ்கள் 4 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, எஸ்.பி., ராஜாராம், துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் சரண்யா, மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us