Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 4.51 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு விருதையில் அமைச்சர் கணேசன் தகவல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 4.51 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு விருதையில் அமைச்சர் கணேசன் தகவல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 4.51 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு விருதையில் அமைச்சர் கணேசன் தகவல்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 4.51 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு விருதையில் அமைச்சர் கணேசன் தகவல்

ADDED : செப் 15, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: 'ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், மேற்கு மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 51 ஆயிரத்து 16 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்' என விருத்தாசலத்தில் அமைச்சர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது.

முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ல், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு எதிரான அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை எதிர்க்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைக்கப் படுகின்றனர்.

குறிப்பாக, இந்தி திணிப்பு, நிதி குறைப்பு, தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை எதிர்க்கும், அனைத்து மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கம் துவங்கிய 70 நாட்களில், 7 லட்சம் நிர்வாகிகள் மூலம் மாநிலத்தில் உள்ள 68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்தனர்.

திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகள் அடங்கிய மேற்கு மாவட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 51 ஆயிரத்து 16 உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள் இணைந்துள்ளனர். நாளை (இன்று) முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மக்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து, முன்மொழிவு உறுதிமொழி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

அதில், ஓரணியில் தமிழ்நாடு இய க்கத்தில் இணைந்துள்ள குடும்பங்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். இந்த தீர்மானங்கள், கரூரில் 17ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தீ ர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது.

இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுரேஷ், ஆசைதம்பி, தொழிலாளர் நலவாரியக்குழு உறுப்பினர் சங்கர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us