/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா
என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா
என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா
என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா
ADDED : செப் 16, 2025 07:14 AM

நெய்வேலி : கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., யில் 65வது ஆண்டு சுரங்க பாதுகாப்பு வார நிறைவு நாள் விழா நடந்தது.
என்.எல்.சி., சுரங்கங்கள் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் தலைமை தாங்கினார். மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் முகமது நியாஸி, துணை இயக்குநர் மகேஷ் சட்லா, தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கருணாகர ராவ், செயலர் செந்தில் குமார், பொருளாளர் மகேஷ் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதலுதவி, பாதுகாப்பு மாதிரிகள், விபத்தில்லா மு யற்சி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு போட்டி களில் வெற்றி பெற்ற ஊழியர்கள், மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. சுரங்க பாதுகாப்பு வார விழா ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பிற சுரங்கங்களைச் சேர்ந்த 9 பேர் கொண்ட ஆய்வுக் குழு, கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை சுரங்கம்-1, சுரங்கம்-1ஏ, மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றை பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், மதிப்பெண்களின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், மதிப்புமிக்க ஒட்டுமொத்த முதல் பரிசு சுரங்கம்-1க்கு வழங்கப்பட்டது. அதே சமயம் ஒட்டுமொத்த இரண்டாம் பரிசு 2வது சுரங்கத்திற்கு கிடைத்தது. மேலும், மூன்று சுரங்கங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் ஒன்பது தனிப்பட்ட பரிசு வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் தங்களின் அறிவியல் படைப்புகளை லிக்னைட் அரங்கில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இரண்டாம் சுரங்க தலைமைப் பொது மேலாளர் சஞ்சீவி நன்றி கூறினார்.