/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்
சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்
சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்
சிறுமிக்கு திருமணம் ; போலீசார் தடுத்து நிறுத்தம்
ADDED : பிப் 12, 2024 06:52 AM
திட்டக்குடி : ராமநத்தத்தில் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கும், ராமநத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபிபுல்லா மகன் அசரப் என்பவருக்கும், நேற்று ராமநத்தம் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
மணப்பெண்ணிற்கு 18 வயது நிறைவடையவில்லை என மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அவர்களது அறிவுறுத்தலின் பேரில், ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரித்து, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
விசாரணைக்காக பெண்ணின் தந்தை உள்ளிட்டோர், ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராக அறிவுறுத்தப்பட்டனர்.