தனியாருடன் போட்டி போட முடியாமல் திணறும் 'ஆவின்' : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு
தனியாருடன் போட்டி போட முடியாமல் திணறும் 'ஆவின்' : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு
தனியாருடன் போட்டி போட முடியாமல் திணறும் 'ஆவின்' : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

ஐந்து லட்சம் லிட்டர்
மே, ஜூன் மாதத்தில் பெய்த கோடை மழையில், பசுந்தீவனம், தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால், பால் உற்பத்தியும் அதிகரித்தது. இதில், ஆவினுக்கு, பால் கொள்முதல், நான்கு முதல், ஐந்து லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
தயிர்
பால் விற்பனை தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை. அதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தவில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளில், பால், தயிர் தேவை அதிகளவில் உள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் தினமும், 2 லட்சம் லிட்டர் தயிர் தேவைப்படுகிறது. ஆவின் தயிர் பாக்கெட் பிரித்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியவில்லை.
தவறான தகவல்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் எம்.ஜி.ராஜேந்திரன் கூறியதாவது: அமைச்சர், ஆவின் நிர்வாகம் எடுத்த முயற்சியால் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக தவறான தகவல் கூறுகின்றனர். மழை பெய்து, பசுந்தீவனம் கிடைப்பதால் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. பால் விற்பனை அதிகரித்தால் தான், கொள்முதல் அதிகரிப்பு என்று கூற முடியும்.
மானியம் நிறுத்தம்
தற்போது, பால் கொள்முதலில் ஆவினுக்கு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. உள்ளூர் பால் விற்பனையும் சேர்த்து, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கணக்கு காட்டி வருகின்றனர்.
தனியாருடன் போட்டி
பால் கொள்முதல் மற்றும் விற்பனைகளில், நுகர்வோர் அதிகரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து, தனியார் நிறுவனங்கள் வலுவாக உள்ளது. தனியாருடன், ஆவின் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது.