ADDED : ஜூலை 01, 2025 07:14 AM

சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் கோவிலில் மாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா நடந்தது.
இதனையொட்டி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர், யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்து வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா பசவராஜ், ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.