Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறை தீர்க்கும் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குறை தீர்க்கும் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குறை தீர்க்கும் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குறை தீர்க்கும் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூலை 01, 2025 07:10 AM


Google News
கடலுார்: மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் உறுப்பினர் பதவிக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென, கடலுார் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கடலுார் மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர் மன்றத்திற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்படும் நாள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பினராக செயல்படுவார்.

இதற்காக நிதி / சட்டம் சார்ந்த தொழிலில் 15ல் இருந்து 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மற்றும் உறுப்பினரின் மூன்றாண்டு பதவி காலம் முடிவடையும் நிலையில் 62 வயது பூர்த்தியடையாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் மேற்பார்வை பொறியாளர், கடலுார் மின் பகிர்மான வட்டம், கேப்பர்மலை, கடலுார்- 607004 அலுவலகத்தில் அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us