/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது
வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது
வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது
வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 11:57 PM

புவனகிரி: புவனகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் டி.எஸ்.பி.,யின் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் புவனகிரி பகுதியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது புவனகிரி பஸ் ஸ்டாண்டில் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த நபரை படித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், ஸ்டேஷக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், கடலுார், முதுநகர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமுணன்,40; என்பதும், குறியாமங்கலம் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவர் வீட்டில் கடந்த 24ம் தேதி 3 சவரன் நகைகள், 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார், லட்சுமணனை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.