ADDED : செப் 04, 2025 02:44 AM
கிள்ளை : கிள்ளை அருகே ஓடையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து,போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிள்ளை அடுத்த பொன்னந்திட்டு ஓடையில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கக்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.