Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கனஜோர்; ஏழை எழிய தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கனஜோர்; ஏழை எழிய தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கனஜோர்; ஏழை எழிய தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

மீண்டும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை கனஜோர்; ஏழை எழிய தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

UPDATED : செப் 04, 2025 08:28 AMADDED : செப் 04, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை 'கனஜோராக' நடந்து வருகிறது. போலீஸ் ஆதரவுடன் தினமும், ஏராளமான ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு, கடந்த 2003ம் ஆண்டு தடை விதித்தது. சுர ண்டல் லாட்டரியால் (ஒரு நம்பர் லாட்டரி சீட்டு) நாசமாகி வரும் குடும்பங்களை காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அண்டை மாநிலமான கேரளா, வட மா நிலங்களில் லாட்டரி சீட்டு தடை செய்யப்படவில்லை. சில ஆண்டுகள், அமைதி காத்த லாட்டரி உரிமையாளர்கள், தற்போது மீண்டும் தீவிரமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்டரி சீட்டுக்களை கொண்டு வந்து வி யாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தினமும், காலை முதல் மதியம் வரை, குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆட்டோ டிரைவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள், சில சலுான் கடைக்காரர்கள், மார்க்கெட் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் என குறிப்பிட்ட சிலரை மட்டுமே, குறிவைத்து விற்கப்படுகிறது.

ரெகுலராக வாங்குபவர்களுக்கு மட்டும், லாட்டரி சீட்டுடன், ரிசல்ட் ஜெராக்சும் வழங்கப்படும். புதிதாக லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமெனில், யாராவது சிபாரிசு செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து, முறையாக சாப்பாடு கூட இல்லாமல் தவிக்கும் வாடகை வாகன ஓட்டிகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி, தினமும் நுாற்றுக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

இது தவிர வடமாநில லாட்டரி சீட்டுகள் கணினி மூலம் விற்கிறோம் என சிலர் துண்டு சீட்டு'களில் மூன்று முதல் 6 இலக்க எண்களை எழுதி கொடுத்து விற்பனை செய்கின்றனர். இதனை ரூ. 60 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

அதிர்ஷ்டம் விழும், ஒரே நாளில் லட்சாதிபதி ஆகலாம் என்ற கணக்கில் பல கூலித்தொழிலாளர் வாங்குகின்றனர். இது போன்ற லாட்டரிகளை வாங்குவதில் பெண் தொழி லாளர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக சம்பளத்தில் பெரும் தொகையை செலவிடுகின்றனர். சட்ட விரோத துண்டு சீட்டு' லாட்டரி விற்பனையால் பலரும் பணத்தை இழப்பதால் குடும்பங்களில் அமைதி கெட்டு வருகிறது.

இதேப்போன்று கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளிலும் லாட்டரி விற்பனை கொடிகட்டி பறக்கிறது. சிலர் இந்த தொழிலையே பெரிய வேலைவாய்ப்பாக நம்பி செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் கேரளா மாநிலம் சென்று வேலை செய்வதாக வீட்டில் கூறிவிட்டு, லாட்டரி விற்பனையில் லாபம் பார்த்து வருகின்றனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி., அதிரடி சிதம்பரம் நகரம் முழுவதிலும் லாட்டரி டிக்கெட் கனஜோராக விற்பனை நடந்தது. இது குறித்து தகவல் கிடைக்கவே, எஸ்.பி.,யின் சிறப்பு படை விசாரணையில் இறங்கியது. இதையடுத்து லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ரா கார்க் நடவடிக்கை மேற்கொண்டு டி.எஸ்.பி., லாமேக் உட்பட 7 பேரை வேலுார் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது, விதி முறைகளை மீறி லாட்டரி விற்க அனுமதித்த குற்றத்திற்காக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இவ்வகையான லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us