/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வழங்கும் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வழங்கும் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள்
கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வழங்கும் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள்
கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வழங்கும் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள்
கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வழங்கும் மகாலட்சுமி கல்வி நிறுவனங்கள்
ADDED : மே 21, 2025 11:43 PM

கடலுார்: கடலுார் பூண்டியாங்குப்பத்தில் உள்ள 36ஆண்டுகள் அனுபவம் மிக்க மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில், பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உறுதி என மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, கடலுார் மாவட்டத்திலேயே அரசு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ஒரே கல்லுாரி. கல்வி, விளையாட்டு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் முதலிடம் பெற்ற கல்லுாரி. இக்கல்லுாரியில் வரும் 31ம் தேதி வரை கட்டண சலுகையுடன் பாலிடெக்னிக் சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
டி.எம்.எல்.டி., டி.எம்.இ., டி.இ.இ.இ., டி.அக்ரி., டி.இ.சி.இ., சிவில், கம்ப்யூட்டர் டிப்ளமோ பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. சேரும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் கல்லுாரி பஸ் பயணம் இலவசம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகையை பெறலாம். பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம்.
இந்தாண்டு முதல் பிளஸ் 2வில் எந்த பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் லேட்டரல் என்ட்ரி மூலம் பாலிடெக்னிக் சேர்க்கை பெறலாம். பயிற்சியை முடித்த மாணவர்கள் பலர், அரசு துறையிலும், தனியார் துறையிலும், பல முன்னணி தொழிற்சாலைகளிலும், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் இயங்கிவரும் மகாலட்சுமி ஹோட்டல் மானேஜ்மெண்ட் அன்டு கேட்டரிங் கல்லுாரி, அழகப்பா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடக்கிறது. மூன்றாண்டு பி.எஸ்.சி., கேட்ரிங் அண்டு ஹோட்டல் அட்மினிஸ்டேரஷன், டிப்ளமோ இன் கேட்டரிங் அண்டு ஹோட்டல் அட்மினிஸ்டேரஷன், ஓராண்டு சான்றிதழ் பயிற்சிக்கான புட் புரோடக்ஷன் மற்றும் புட் பேவரேஜ் சர்வீஸ் கோர்ஸில் சேர்க்கை பெறலாம்.
பயிற்சி காலத்திலேயே சம்பளத்துடன் கூடிய பயிற்சியும் பெற்றுத்தரப்படுகிறது. பயிற்சியை முடித்தவுடன் 100சதவீத வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
ஐ.டி.ஐ., இலவச சேர்க்கை
மத்திய அரசின் நிரந்தர அங்கீகாரம் பெற்று இயங்கும் மகாலட்சுமி ஐ.டி.ஐ.,யில் தமிழக அரசு ஒதுக்கீட்டின் முதல் 150 மாணவர்களுக்கான இலவச ஐ.டி.ஐ.,சேர்க்கை நடக்கிறது. இதில் எட்டாம் வகுப்பு, பத்தாம்வகுப்பு பாஸ் மற்றும் பெயில் ஆன மாணவர்கள் சேர்க்கை பெறலாம். எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி.,மெக்கானிக், ஒயர்மேன் ஆகிய இரண்டாண்டு என்.சி.வி.டி., பிரிவுகளிலும், தமிழக அரசின் எஸ்.சி.வி.டி., பயிற்சிக்கான ஆட்டோமொபைல் மெக்கானிக், எலக்ட்ரிகல் டெக்னாலஜி, ஏ.சி.,மெக்கானிக், வெல்டர் ஆகிய ஒரு வருட பயிற்சிக்கும் சேர்க்கை நடக்கிறது.
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இலவசமாக ஐ.டி.ஐ.,சேர்க்கை பெறலாம் என்றார்.