கற்றலை தேடி திட்டம்: கலெக்டர் ஆய்வு
கற்றலை தேடி திட்டம்: கலெக்டர் ஆய்வு
கற்றலை தேடி திட்டம்: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 10, 2025 08:28 AM

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில், 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தில், வகுப்புகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம், வழுதலம்பட்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் ஊராட்சி, தங்களிக்குப்பம் பகுதியில் வீடு கட்டுமான பணியை ஆய்வு செய்தார். குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில், 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தில், வகுப்புகள் நடைபெறுவதை ஆய்வு செய்து, கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
குறிஞ்சிப்பாடி கமிட்டி விற்ப னை கூட அலுவலக கூட்ட அரங்கில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்.டி.ஓ.,க் கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், தொடக்கப்பள்ளி மாவட் ட கல்வி அலுவலர் ஞானசங் கர் உட்பட பலர் பங்கேற்றனர்.