/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 40 ஆயிரம் பொருட்கள் கோவிலில் திருட்டு ரூ. 40 ஆயிரம் பொருட்கள் கோவிலில் திருட்டு
ரூ. 40 ஆயிரம் பொருட்கள் கோவிலில் திருட்டு
ரூ. 40 ஆயிரம் பொருட்கள் கோவிலில் திருட்டு
ரூ. 40 ஆயிரம் பொருட்கள் கோவிலில் திருட்டு
ADDED : செப் 10, 2025 08:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் இறைச்சகாளி கோவிலில் வெள்ளி அணிகலன்கள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் பின்புறம் உள்ள கருவேல காட்டின் நடுவே, இறைச்சகாளி கோவில் உள்ளது.
இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் கோவில் பூசாரி வழக்கம்போல பூட்டிவி ட்டு சென்றார். நேற்று காலை வந்துபார்த்தபோது, கோவிலின் பூட்டுகள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சு வாமிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கண்கள் உள்ளிட்ட அணிகலன்கள், பட்டுப் புடவைகள் என 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்ற னர்.