ADDED : பிப் 11, 2024 03:07 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை நிர்மலா தலைமை தாங்கினார்.
ஆசிரியை தெய்வமகள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி பங்கேற்று, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஸ்ரீ ராமுலு, இலங்கேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.