/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பு.முட்லூரில் கோலப்போட்டி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்புபு.முட்லூரில் கோலப்போட்டி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பு.முட்லூரில் கோலப்போட்டி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பு.முட்லூரில் கோலப்போட்டி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பு.முட்லூரில் கோலப்போட்டி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : பிப் 24, 2024 06:24 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் அ.தி.மு.க., மகளிரணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோலப்போட்டி நடந்தது.
மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் தலைமை தாங்கினார். கோலப்போட்டியை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, கோலம் போட்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ராம அனுமான் தர்ம பரிமான அறக்கட்டளை தலைவர் சீனு என்கிற ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.