ADDED : மே 22, 2025 11:29 PM
புவனகிரி: புவனகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.
புவனகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. முகாமில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாம் நேற்று நிறைவு பெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த 54 பேருக்கு அதற்கான ஆணையை டி.ஆர்.ஓ., ராஜேசகரன் வழங்கினார்.
தாசில்தார் சித்ரா, தலைமையிடத்து கூடுதல் தாசில்தார் வேல்மணி, மண்டல துணை தாசில்தார் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.