/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதகு பாலம் திடீர் மூடல் விவசாயிகள் அவதி மதகு பாலம் திடீர் மூடல் விவசாயிகள் அவதி
மதகு பாலம் திடீர் மூடல் விவசாயிகள் அவதி
மதகு பாலம் திடீர் மூடல் விவசாயிகள் அவதி
மதகு பாலம் திடீர் மூடல் விவசாயிகள் அவதி
ADDED : மே 22, 2025 11:29 PM

சேத்தியாத்தோப்பு: பூதங்குடியில் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்., மதகு பாலத்தில் இரும்பு கேட் போட்டு மூடியுள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் வி.என்.எஸ்., மதகு பாலத்தின் வழியாக பூதங்குடி, கோதண்டவிளாகம், வட்டத்துார் உள்ளிட்ட கிராம விவசாயிகள் கோதாவரி வாய்க்காலை கடந்து தங்கள் நிலத்திற்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் சென்று வந்தனர்.
இந்நிலையில், மதகு உள்ள பாலத்தில் திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள், இரும்பு கேட் போட்டு யாரும் செல்லாத வகையில் மூடியுள்ளனர்.
இதனால், விவசாயிகள் நிலத்திற்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பாலம் திடீரென மூடப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே, கேட்டை திறந்து பாலத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.