ADDED : ஜூன் 22, 2025 01:50 AM

கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். மாணவர்களுக்கு யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.