பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு
பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு
பா.ம.க., வினர் 250 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 22, 2025 01:51 AM
கடலுார் : கடலுாரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 250 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுாரில் மாவட்ட பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு, பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில பொருளாளர் திலகபாமா, தாமரைக்கண்ணன், சகாதேவன், ராஜசேகர் உட்பட 250 பேர் மீது கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.