/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காமராஜர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் காமராஜர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
காமராஜர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
காமராஜர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
காமராஜர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 26, 2025 11:50 PM

புவனகிரி: கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்பம் மற்றும் மருந்தியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
கல்வி குழுமத்தின் தாளாளர் அழகிரி தலைமை தாங்கினார். மேலாளர் கேசவன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் தமிழரசு சம்பந்தம் முகாமை துவக்கி வைத்தார்.
வடலுார் மனவளக்கலை மன்றம் சார்பில் லலிதா மற்றும் தனலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், ஆசனங்கள், முச்சுப் பயிற்சி குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பேராசிரியர் கோமதி நன்றி கூறினார்.