/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 26, 2025 11:51 PM

திட்டக்குடி: திட்டக்குடி தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் அங்கன்வாடி மையத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளின் எடை, உயரம், நலம், ஊட்டச்சத்து விகிதம், பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த துணை உணவுகளை முறையாக வழங்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, நாற்றங்கால் பண்ணை ஆய்வு செய்தார். இறையூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் தையலகம், கூடலுார் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் உலர்களம், மதுரவள்ளியில் என்.எல்,சி., சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி 14 லட்சத்து 66 ஆயியரம் மதிப்பில் ஏரி துார்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, அவசர சிகிச்சை பிரிவு மருந்தகம், ஊசிபோடும் அறை உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்து, ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார்.
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தாட்கோ நிதி 6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 'விழுதுகள்' மறுவாழ்வு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது. ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, தாசில்தார் உதயகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.