/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கீழ்நத்தத்தில் ரேஷன் கடை கட்டடம் திறப்புகீழ்நத்தத்தில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
கீழ்நத்தத்தில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
கீழ்நத்தத்தில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
கீழ்நத்தத்தில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
ADDED : ஜன 07, 2024 05:41 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்நத்தத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புவனகிரி தொகுதிக்குட்பட்ட கீழ்நத்தம் கிராமத்தில் எம்.எல்.ஏ., நிதி 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. நேற்று நடந்த திறப்பு விழாவில் ,புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
கீரப்பாளையம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரியர்வேழவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ்நத்தம் அ.தி.மு.க., கிளைசெயலாளர் குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் வள்ளி தில்லைமணி, கமலக்கண்ணன், செல்வராசு, குமார், சதீஷ்,ராஜ்குமார், கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஒன்றிய துணை செயலாளர் சுனிதாபாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.