அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி
அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி
அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி
UPDATED : ஜூலை 03, 2024 03:35 PM
ADDED : ஜூலை 03, 2024 03:34 PM

புதுடில்லி: ‛‛ பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டனர் '' என, அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் கூறினார்.
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.


என்னையையோ, உங்களையோ அவர்கள் அவமதிக்கவில்லை. அரசியல்சாசனத்தின் மீது ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளனர். அரசியலமைப்பை அவமதிக்கும் செயல், இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களின் செயலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, கையில் வைத்து இருப்பது அல்ல. இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.