/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தலைகுனிந்து படித்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்: அமைச்சர் கணேசன் தலைகுனிந்து படித்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்: அமைச்சர் கணேசன்
தலைகுனிந்து படித்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்: அமைச்சர் கணேசன்
தலைகுனிந்து படித்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்: அமைச்சர் கணேசன்
தலைகுனிந்து படித்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்: அமைச்சர் கணேசன்
ADDED : மார் 24, 2025 05:34 AM
கடலுார், :மாணவர்கள் சிறந்த புத்தகங்களை தலைகுனிந்து படித்தால், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கலாம் என, அமைச்சர் கணேசன் பேசினார்.
கடலுார் கண்காட்சி துவக்க விழாவில் அவர் பேசியது:
மாணவர்கள் படிக்கும்போதே அரசு போட்டித்தேர்வு எழுதுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக, அரசு நடத்தும் புத்தக கண்காட்சிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதன் யார் என்பதை உணர வைப்பதில் புத்தகத்தின் பங்கு முக்கியமானது.
புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதது. புத்தகத்தில் இடம்பெறும் அறிய தகவல்கள், வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ள முடியும்.
மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லுாரி புத்தகத்தை படிப்பதோடு மட்டுமில்லாமல் பொது அறிவு மற்றும் நல்ல கருத்துக்களை வளர்க்கும் புத்தகங்களை படிக்க வேண்டும்.
புத்தக திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் ஒவ்வொரும் தங்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகத்தை தேர்வு செய்து படித்து அறிவாற்றலையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் சிறப்பான புத்தகங்களை தலைகுனிந்து படித்தால் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.