ADDED : மார் 24, 2025 05:33 AM
சிதம்பரம் : ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்தி சென்ற 21 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் இருப்பு பாதை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன மற்றும் மணிகண்டன், விக்ரம், சபரி உள்ளிட்ட போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த, புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் சோதனை மேற்கொணடனர்.
அதில், ரயிலின் முன்பக்கம் உள்ள பொதுபெட்டியில், சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த தடை செய்யப்பட்ட 21 கிலோ எடையுள்ளபான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.