குட்கா விற்பனை பெட்டிக்கடைக்கு சீல்
குட்கா விற்பனை பெட்டிக்கடைக்கு சீல்
குட்கா விற்பனை பெட்டிக்கடைக்கு சீல்
ADDED : ஜன 01, 2024 05:40 AM
கடலுார் : கடலுாரில் குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடலுார் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., கவியரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, செம்மண்டலம் பகுதியில் எஸ்.என்.சாவடியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர், தனது பெட்டிக்கடையில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை கடலுார் வட்டார அலுவலர் சந்திர சேகரன் தலைமையில், சின்னத்தம்பியின் பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப் பட்டது.