ADDED : ஜன 28, 2024 06:14 AM

கடலுார் கடலுாரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடந்த முகாமை, அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தனர்.
துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி, பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா முன்னிலை வகித்தனர். கண்ணில் புரை, கிட்டப் பார்வை, துாரப்பார்வை, தலைவலி, கண்ணில் நீர் வடிதல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சன் பிரைட் பிரகாஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், தொழிலதிபர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.