ADDED : ஜன 31, 2024 02:14 AM

பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி மழலையர் பள்ளியில் மாணவர்களுக்கான ஆரோக்கியமான உணவு திருவிழா போட்டி நடந்தது.
இதில், பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள், கீரை வகைகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.
அதில் உணவு சம்மந்தப்பட்ட கேள்விகளும் பெற்றோர்களுக்கு கேட்கப்பட்டன. பின் சிறந்த உணவு தயாரித்த பெற்றோருக்கு பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி, பள்ளி தலைமை ஆசிரியை சுமதி பரிசு வழங்கினர். சிறப்பு விருந்தினராக ஊட்டச்சத்து நிபுணர் ஷோபனா பங்கேற்று பேசினார்.